மணக்கும் சிக்கன் மசாலா பொடி தயார் செய்வது எப்படி? / HOW TO MAKE CHICKEN MASALA POWDER AT HOME?
ONEINDIA TAMILMarch 29, 2023
0
சிக்கன் குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள் வீடே மணக்கும்.
தேவையான பொருட்கள்
தனியா - 100 கிராம்
சிவப்பு மிளகாய் - 25 கிராம்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
அரிசி - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பிரிஞ்சு இலை - 2
ஸ்டார் பூ - 1
பட்டை - 1 இஞ்ச்
கிராம்பு - 5
கல் பாசி - சிறிதளவு
கருப்பு ஏலக்காய் - 2
கல் உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
காய்ந்த மிளகாயைத் தவிர மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
அதை வெப்பம் தனியுமாறு பெரிய தட்டில் கொட்டிக் காயவிடவும்.
தற்போது அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
பொடியை வெப்பம் போக காய வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்துவையுங்கள்.