Type Here to Get Search Results !

SYMPTOMS OF PARALYSIS IN TAMIL: பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்

Top Post Ad


SYMPTOMS OF PARALYSIS IN TAMIL: பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்

SYMPTOMS OF PARALYSIS IN TAMIL: பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்: பக்கவாதம் என்பது கொடுமையான விஷயமாக கருதப்படுகிறது, இந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்மால் தனித்து செயல்பட முடியாது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடைகள் ஏற்படுவதால், மூளையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு நமது உடலிலுள்ள செல்கள் பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படுகிறது. மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதால் நமது உடல் செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. 

முகம் ஒருபக்கமாக வளைதல் அல்லது வாய் பேச முடியாத நிலை ஏற்படுதல் போன்றவை பக்கவாதத்தின் பொதுவான வெளிப்பாடாக இருந்து வருகிறது. பெரும்பாலும் கை அல்லது கால் பகுதியில் தான் பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் திடீரென்று ஏற்படுகிறது தான் என்றாலும் பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னர் சில அறிகுறிகளை நமது உடல் வெளிப்படுத்துகின்றது. தீவிர பக்கவாதம் ஏற்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பு சில அறிகுறிகள் வெளிப்படுகிறது. 

பக்கவாத நோயாளிகளில் 43 சதவீதம் பேர் பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை மினி-ஸ்ட்ரோக் அறிகுறிகளை அனுபவித்ததாக ஆராய்ச்சியின் அறிக்கைகள் தெரிவிக்கிறது. இந்த வகையைச் சேர்ந்த பொதுவான அறிகுறிகளில் ஒன்று உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
SYMPTOMS OF PARALYSIS IN TAMIL: பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்

சிலருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பு தலைவலி, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிப்பார்கள். 

உங்களின் ஒரு கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது வலி போன்றவை ஏற்படும், மூளையின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுவதால் தான் இதுபோன்ற நிலை உங்களுக்கு ஏற்படுகிறது. சிலருக்கு உடலின் பெரும்பகுதி பலவீனமாக இருக்கும். 

உங்கள் கைகளில் ஒன்றில் பலவீனம் என்பது ஒரு தொடர்ச்சியான பக்கவாதத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்த அறிகுறிகளை முன்னரே நீங்கள் கவனிப்பதன் மூலம் பெரியளவில் ஆபத்துக்கள் எதுவும் நடக்காமல் அதிலிருந்து தப்பித்து விடலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.