Type Here to Get Search Results !

TIPS TO INCREASE MOBILE INTERNET SPEED 2023: உங்க மொபைல இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க குறிப்புகள்

TIPS TO INCREASE MOBILE INTERNET SPEED 2023:

TIPS TO INCREASE MOBILE INTERNET SPEED 2023: இன்று இருக்ககூடிய சூழ்நிலையில் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை இன்டர்நெட்டிலும் இன்டர்நெட்டின் ஸ்பீட் மிகவும் குறைவாக இருக்கிறது. 

உங்களுடைய டேட்டா பேக் மிகவும் வேகமான இன்டர்நெட் சேவையை வழங்கினாலும், உங்கள் போனில் உங்களுக்குத் தெரியாமல் சேவ் செய்யப்பட்ட டேட்டாக்களின் காரணமாக உங்களுடைய இன்டர்நெட் வேகம் கணிசமாகக் குறைகிறது. அதை எப்படிச் செய்வது என்று தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி, உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகத்தை நீங்கள் கணிசமாக அதிகரிக்கலாம்

TIPS TO INCREASE MOBILE INTERNET SPEED 2023: முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் குரோம் பிரவுசரை திறந்து, பின் அதற்கு மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். 

பிறகு செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அதன் உள்ளிருக்கும் சைட் செட்டிங் (Site Settings) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்பக்க கீழே ஸ்க்ரோல் செய்தால் ஸ்டோரேஜ் அல்லது டேட்டா ஸ்டோர்டு என்ற விருப்பம் காண்பிக்கப்படும். 

TIPS TO INCREASE MOBILE INTERNET SPEED 2023: இதை கிளிக் செய்து கிளியர் ஆல் டேட்டா (Clear all data) என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் உங்களுக்கு தெரியாமல் சேவ் செய்யப்பட்ட இன்டர்நெட் டேட்டாக்கள் அனைத்தும் கிளியர் செய்யப்படும். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.

இரண்டாவதாக, உங்களுடைய கூகுள் குரோம் பிரவுசரை திறந்து, மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். 

அடுத்தபடியாக, செட்டிங்ஸ் என்ற விருப்பத்தை கிளிக் செய்து அதில் சிங்க் ஆன் (Sync On) என்று காண்பிக்கப்படும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

இந்த ஆப்ஷன் ஆன் (ON) இல் இருந்தால், அதை உடனடியாக ஆஃப் (OFF) செய்யவும். இந்த ஆப்ஷனை ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் டேட்டா சேவ் (Data save) செய்யப்படும் இதனால் இன்டர்நெட் வேகம் அதிகம் ஆகும்.

கடைசியாக உங்கள் ஸ்மார்ட் போனின் செட்டிங்ஸ் ஓப்பன் செய்து, மொபைல் நெட்வொர்க் (Mobile Network) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

இப்பொழுது அதன் உள்ளிருக்கும் டேட்டா சேவர் (Data saver) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இந்த டேட்டா சேவர் அம்சம் ஆன்ல இருந்தால் அதை ஆஃப் செய்து வைப்பது உங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும்.

இப்படி செய்வதன் மூலம் பேக்ரவுண்டில் இயக்கப்படும் தேவையில்லாத சில ஆப்ஸ்கள் உரியும் டேட்டாவை இந்த அம்சம் தடுக்கிறது. இதன் மூலம் உங்களுடைய இன்டர்நெட் வேகத்தை நீங்கள் கணிசமாக அதிகரிக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad