BENEFITS OF NANNARI VER IN TAMIL: நன்னாரியின் வேர் சித்த மருத்துவத்தில் அதிகளவு உபயோகம் செய்யப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோடை காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்கும் வல்லமையும் நன்னாரிக்கு உண்டு.
நன்னாரியின் வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு உதவியுடன் நன்னாரி பானம் தயார் செய்யப்படுகிறது. நன்னாரி படரும் கொடிவகை ஆகும். இதன் இலைகள் மீது வெண்ணிற வரிகள் இருக்கும். இதற்கு பல பெயர்களும் இருக்கின்றன. சீமை, பெரு, கரு என 3 வகை நன்னாரிகளும் இருக்கின்றன.
பெருநன்னாரி கிழக்கு ஊறுகாய் செய்து சாப்பிட கல்லீரல் பிரச்சனை, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களுக்கு எதிராக செயல்படும்.
பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். நன்னாரி வேர்ப்பொடியோடு கொத்தமல்லியை சேர்த்து கொதிக்கவைத்து குடிக்க பித்த கோளாறு, வயிறு மற்றும் குடல் பிரச்சனைகள் நீங்கும்.
நன்னாரி - நெருஞ்சில் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து கஷாயம் போல காய்ச்சி குடிக்க சிறுநீரக கற்கள், பிதைப்பை கற்கள் பிரச்சனை சரியாகும். நன்னாரி, தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
நன்னாரியின் வேரினை நெல்லிக்காய் சாறில் ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் 2 கிராம் அளவு சாப்பிட உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து இதயம் வலுவாகும்.