Boat Junior Assistant Recruitment 2023: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் Board Of Apprenticeship Training (SR) என்ற அரசு நிறுனத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க, ஜூலை 27 ஆம் தேதி கடைசி நாளாகும். அதாவது, ஒன்லி த்ரீ டேஸ்...! தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- நிர்வாகம்: தொழில் பழகுநர் பயிற்சி வாரியம்(Board of Apprenticeship Training)
- மேலாண்மை: மத்திய அரசு
பணி விவரம்
- Stenographer (Group C)
- Lower Division Clerk /Junior Assistant (Group C)
- Multi-Tasking Staff (MTS) (Group C)
விண்ணப்பிக்க கடைசி தேதி
- 27.07.2023(ஆஃப்லைன்)
கல்வி தகுதி
Boat Junior Assistant Recruitment 2023: ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 அல்லது 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
டைப்பிங் மற்றும் ஸ்டெனோகிராபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் அவசியம். (டைப்பிங் 40 w.p.m. ) (shorthand speed of 100 words per minute)
ஜூனியர் அசிஸ்டண்ட் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். (30 words per minute)
பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
- ஸ்டெனோகிரபர் - ரூ.25,500 (ஊதிய நிலை 4, 7th CPC)
- ஜூனியர் அசிஸ்டண்ட் / லோயர் டிவிசன் கிளர்க் ரூ.19,900 (ஊதிய நிலை 2, 7th CPC)
- மல்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் - ரூ.18,000 (ஊதிய நிலை 1, 7th CPC)
வயது வரம்பு
Boat Junior Assistant Recruitment 2023: விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சலுகை, தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் / ஓ,பி,சி. ரூ.1000 செலுத்த வேண்டும். பட்டியலின /பழங்குடியின பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு https://boat-srp.com/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH- என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரதி எடுத்து, விண்ணப்ப கட்டண ரசீது, அதனுடன் கோரப்பட்ட சான்று ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 27.07.2023. அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
The Director of Training,
BoAT(SR),
Chennai.
விண்ணப்பதாரர்கள் வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என, தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண், இ-மெயில் ஆகிய விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://boat-srp.comஅதிகாரபூர்வ இணையத்தளம் செல்ல வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள தகுதியைச் சரிபார்க்கவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும் அல்லது https://boat-srp.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் செய்யவும்.
பொதுவான நிபந்தனைகள் என்ற தலைப்பில் விரிவான விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதை படித்து தெரிந்து கொள்ளவும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட லிங்கை, ஒரு முறை கிளிக் பண்ணுங்க