Type Here to Get Search Results !

NELLIKAI RASAM: நெல்லிக்காய் ரசம்

NELLIKAI RASAM

NELLIKAI RASAM: இன்றைய காலகட்டத்தில், கை, கால் வலி, மூட்டு வலி, தொடை வலி என்று சொல்லாதோர் குறைவாகவே உள்ளனர். இவற்றையெல்லாம் சரி செய்ய இந்த ஓர் எளிய முறையில் செய்யக்கூடிய ரசம் தீர்வு தருகிறது. நாம் இப்போது சத்தான நெல்லிக்காய் ரசம் எப்படி செயலாம்னு பார்ப்போம்.

தேவையானவை

  • NELLIKAI RASAM: நெல்லிக்காய் - 15
  • வெற்றிலை - 20
  • கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
  • கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
  • பூண்டு - 8 பல்
  • காய்ந்த மிளகாய் - 5
  • சீரகம் - 1ஸ்பூன்
  • வால் மிளகு - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • NELLIKAI RASAM: முதலில் நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, அதன் விதையை நீக்கி சாறு எடுக்க வேண்டும். அதன் பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு ஒரு வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, அதனுடன் நறுக்கிய பூண்டு, தட்டி எடுக்கப்பட்ட வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
  • பின்னர் பொடியாக நறுக்கி வைக்கப்பட்ட கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலை இவற்றையும் அதில் போட்டு, அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கியதும் விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • அதன்பின் ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைக்கப்பட்ட விழுதை அதிலே போட்டு வதக்கவும். விழுது வதங்கியதும் நெல்லிக்காய் சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் இவற்றை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  • கொதிக்கும் பக்குவம் வந்ததும் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும். இப்போது நல்ல சுவையான, மருத்துவ குணமிக்க, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நெல்லிக்காய் ரசம் ரெடி.
  • இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், இதய நோயாளிகளுக்கும் இது ஒரு அற்புத குணமளிக்க கூடிய மருந்தாகும். மேலும் எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad