கவியரசர் கண்ணதாசன் (ஜூன் 24, 1927 – அக்டோபர் 17, 1981) சிவகங்கை மாவட்டத்தில் சிறுகூடல்பட்டி என்னும் ஊரில் சாத்தப்பனார் – விசாலாட்சிக்கு ஜூன் 24, 1927 அன்று பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.
இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
இவர் கவியரசு எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
ஏராளமான திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார்.
இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
சிறப்பு பெயர்கள்
கவியரசு
காரைமுத்து புலவர்,
வணங்காமுடி
பார்வதிநாதன்
ஆரோக்கியசாமி
கமகப்பிரியன்
கவியரசன்
கவிச்சக்கரவர்த்தி
படைப்புகள்
மாங்கனி
ஆட்டனத்தி ஆதிமந்தி
கவிதாஞ்சலி
பொன்மழை
அம்பிகா
அழகு தரிசனம்
பகவாத் கீதை விளக்கவுரை
ஸ்ரீ கிருஷ்னகவசம்
பாரிமலைக் கொடி
சந்தித்தேன் சிந்தித்தேன்
அனார்கலி
தெய்வ தரிசனம்
இயேசு காவியம் (5 பாகங்கள் 149 உட்பிரிவு - இறுதியாக எழுதிய காப்பியம்),