எஸ்.பி.ஐ அம்ரித் கலஷ் திட்டம் / SBI AMRIT KALASH DEPOSIT SCHEME: எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, தனது முந்தைய வைப்பு நிதித் திட்டமான, 'அம்ரித் கலஷ்' திட்டத்தை, இம்மாதம் 12ம் தேதியன்று மறு அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக, உள்நாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இரண்டு கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதமாகவும்; மற்றவர்களுக்கு 7.10 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கான வட்டித் தொகையை மாதந்தோறும், காலாண்டுக்கு ஒருமுறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை என விருப்பத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி; இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டின் முதிர்வுத் தொகைக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 400 நாட்களாகும். இத்திட்டத்தை, ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்தியிருந்தது.
அதில், இத்திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, இத்திட்டத்தை மீண்டும் இம்மாதம் 12ம் தேதி மறு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் இணைவதற்கு வரும் ஜூன் 30ம் தேதியை கடைசி தேதியாக எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது. வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதமாகவும்; மற்றவர்களுக்கு 7.10 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.