Type Here to Get Search Results !

திருவையாறு 'அசோகா' / THIRUVARU ASOKA HALWA

திருவையாறு 'அசோகா' / THIRUVARU ASOKA HALWA:

திருவையாறு 'அசோகா' / THIRUVARU ASOKA HALWA: உணவுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவு என்பது நகமும் சதையும் போல. ஊர் பெயரைச் சொன்னாலே அந்த பகுதியில் எது சிறந்த உணவு எது என்பது நம் கண்முன்னே வந்து நிற்கும்.

அதற்கு காரணம் அதன் சுவையும், தரமும் தான்.அப்படிப்பட்ட ஒரு சிறந்த உணவைத் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். திருவையாறுக்குப் பல சிறப்புகள் உள்ளது. அதில் ஒன்று தான் அசோகா. 

இந்த அசோகா, உலகின் எந்த மூலையில் நீங்கள் சாப்பிட்டாலும், திருவையாற்றில் சாப்பிடுவது போல் வராது எனப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட சுவையான திருவையாறு அசோகாவை வீட்டிலேயே எளிதாக எப்படிச் செய்யலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • திருவையாறு 'அசோகா' / THIRUVARU ASOKA HALWA: பாசிப் பருப்பு - 1 கப்
  • கோதுமை மாவு - முக்கால் கப்
  • மைதா மாவு - 2 தேக்கரண்டி
  • சர்க்கரை - 3 கப்
  • நெய் - ஒன்றரை கப்
  • ஏலக்காய்த்தூள் - 1/3 தேக்கரண்டி
  • முந்திரி - 50 கிராம்
  • திராட்சை - 20 கிராம்
  • கேசரி பவுடர் - 1 சிட்டிகை 

செய்முறை

திருவையாறு 'அசோகா' / THIRUVARU ASOKA HALWA: கோதுமை மாவுடன், மைதா மாவைச் சேர்த்துச் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி எடுத்துக்கொண்டு, அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரிப் பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும்.அதே கலவையில் சலித்து எடுத்த கோதுமை மாவு மற்றும் மைதா மாவைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.

இதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். மாவும், பருப்பும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு சர்க்கரையையும், கேசரி பவுடரையும் சேர்த்து கைப்படாமல் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன், அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்துக் கிளறி எடுத்தால் சுவையான திருவையாறு அசோகா தயார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad